குஷ்டம் குணமாக
அதிகாலை வெறும் வயிற்றில் துத்தி இலையை மென்று சாப்பிட்டு வர குஷ்டம் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
அதிகாலை வெறும் வயிற்றில் துத்தி இலையை மென்று சாப்பிட்டு வர குஷ்டம் குணமாகும்.
மிளகையும், வெற்றிலையையும் அம்மியில் வைத்து மைபோல் அரைத்து 5 கிராம் அளவு உண்டுவர சகலவித விஷங்களும் உடலிலிருந்து அகன்று விடும்.
வல்லாரை இலைகளை பால்விட்டு இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து வாரம் ஒரு முறை உண்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.
தென்னை ஓலையை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி செருப்புக்கடி புண்மீது தடவி வர செருப்புக்கடி புண் குணமாகும்.
துத்தி இலை சாற்றை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் குணமாகும்.
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி குடித்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் அகலும்.
முருங்கைஇலை சாற்றை சிறிது சூடாக்கி அரைச்சங்கு அளவு புகட்டி வந்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
கீழாநெல்லி இலைகளுடன் கற்கண்டு கலந்து உண்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
5 கிராம் கஸ்தூரி மஞ்சள், 5 கிராம் சாதா மஞ்சள், 5 கிராம் கருஞ்சீரகம் இம்மூன்றையும் இடித்து பொடியாக்கி தேங்காய் பாலில்...