வாயுபிடிப்பு குணமாக
வாதமடக்கி மரத்தின் கொழுந்து இலைகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு பிடிப்பு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாதமடக்கி மரத்தின் கொழுந்து இலைகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு பிடிப்பு குணமாகும்.
ஆரஞ்சுபழ தோல்களை தண்ணிரில் கொதிக்க வைத்து கஷாயம் குடித்தால் வாயு தொந்தரவு குறையும்.
முற்றிய தேங்காயை திருகி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டிவந்தால் அண்டவாயு தீரும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு தீரும்
வேலிப்பருத்தி வேரை பொடி செய்து 4 சிட்டிகை அளவு பாலில் கலந்து கொடுக்கலாம்.
வாதநாராயணன் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை சுடுநீரில் வெறும் நீரில் காலையில் சாப்பிட்டு வரவும்.
எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும் படி கொடுக்க குணம் பெறலாம்.
கல்யாண முருங்கை இலைச்சாறை 10 துளி அளவு வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பாகற்காய் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்திவர பூச்சி, புழுக்கள் ஒழியும்.