பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க
பூண்டை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் பவுத்திரத்தின் தொந்தரவு நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
பூண்டை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் பவுத்திரத்தின் தொந்தரவு நீங்கும்.
காட்டுதுளசி விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் அளவு பொடியை பாலுடன் சேர்த்து குடிக்கவும்.
ஓமம் 50 கிராம் அளவு வறுத்து 150 கிராம் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
திருநீற்று பச்சிலை விதையை கொதிநீரில் ஊற வைத்து சாபிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மாதுளம்பூவை கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரைக் குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வரலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிட்டு வரலாம்.
வில்வ இலையை மாலை வேளையில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் குடிக்க புண் ஆறும்.
தாமரை கிழங்கை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீர் அல்லது இளநீரில் சாப்பிடவும்.