புண்
குடல்புண் குறைய
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், தென்னம்பாளை ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாக்கி தூள் செய்து காலை இரவு இருவேளையும் உணவுக்கு...
வயிற்றுப்புண் குறைய
பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும்
வயிற்றுப்புண் குறைய
லெட்டூஸ்கீரை இலைகளை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல் புண் ஆகியவை குறையும். மேலும் நுரையீரல் பலப்படும்
குடல் புண் குறைய
முட்டைக்கோஸை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குடல் புண் குறையும்.
வயிற்றுப் புண் குறைய
நாய்வேளை இலைகளை எடுத்து சுத்தம் செய்து சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குறையும்.
குடல் புண் குறைய
வில்வபழத்தை நன்கு காயவைத்து பொடி செய்து அதில் கால்கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் குடல்புண் குறையும்.
வயிற்று புண் குறைய
புளியம்பட்டையை இடித்து தூள் செய்து அதில் உப்பு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் புண்கள் குறையும்.