நீர் எரிச்சல் குறைய
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
வெந்தயத்தை ஊற வைத்து சீரகம், சோம்பு மூன்றையும் அரைத்து மோரில் கலந்து குடிக்க நீர்க்கடுப்புக் குறையும்.
சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை இரண்டையும் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்க்கடுப்புக் குறையும்.
முள்ளங்கிச் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
நீர்முள்ளி இலையை காய்ச்சி காலை, மாலை 200 மில்லி வீதம் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
சங்கமவேர், பட்டையை காய்ச்சி 20 மில்லி சாறெடுத்து 100 மில்லி பாலில் கலந்து காலையில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வர ...
ஆவாரம் பூவை பாலில் போட்டு காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க நீர்கடுப்பு குறையும்.