சொறி சிரங்கு குறைய
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.
வேலிப் பருத்தி இலைகளை மஞ்சள் சேர்த்து அரைத்து, உடம்பில் தேய்த்துக் குளித்துவர சொறி-சிரங்கு குறையும்.
பருத்தி பிஞ்சு, அத்தி பிஞ்சு, ஜாதிக்காய், சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் அம்மை நோய் தாக்கம் குறையும்.
சந்தன கட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து படர் தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர் தாமரை குறையும்.
குப்பை மேனி இலையுடன் சிறிய துண்டு மஞ்சள், சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து சிரங்கின் மேல் பூச சிரங்கு குறையும்.
கீழாநெல்லி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு குறையும்.
சந்தனத்தை பன்னீருடன் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வியர்க்குரு குறையும்.
குப்பை மேனி, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சொறிசிரங்கு உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து...
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குறையும்.