பசியின்மை குறைய
சுக்காங்கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்காங்கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
அரத்தையை சூரணம் செய்து தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் வரை தேனில் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
நன்னாரி வேரை நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பசியின்மை குறையும்.
நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி உண்டாகும்.
10 கிராம் குங்குமப்பூவை 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து குடிநீர் செய்து கொடுத்தால் பசியின்மை குறையும்.
களா செடியின் காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட்கொள்ள பசியின்மை, சுவையின்மை குறையும்.
திராட்சை, மாதுளம் பழங்களில் 1/2 டம்ளர் சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உணவுக்குமுன் குடிக்க...