தலை மாந்தம்

குழந்தைக்கு சுரம் அதிகமாயிருக்கும். குளிர் நடுக்கம் உண்டாகும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். மூக்கில் நீர் வடியும். உடல் வீக்கம் காணும். காலும் கையும் குளிர்ந்திருக்கும். ஏப்பம், கொட்டாவி உண்டாகும். தலைவலி, தலைகனம் ஆகியவை இருக்கும்.

மருந்து

வெள்ளருகுச்சாறு – 1 அவுன்சு
வேலிப்பருத்தி சாறு – 1 அவுன்சு
வெதுப்படக்கி சாறு – 1 அவுன்சு
பெருந்தும்பை சாறு – 1 அவுன்சு
துளசி சாறு – 1 அவுன்சு

இவற்றை ஒன்றாக்கிக்கொண்டு

திப்பிலி – 20 கிராம்
வசம்பு – 20 கிராம்
வெள்ளைப்பூண்டு – 20 கிராம்
சதக்குப்பை – 5 கிராம்
தேசாவரம் – 5 கிராம்

இவற்றை மேற்ப்படி சாருகளினால் மைபோல் அரைத்துக் கலக்கி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை உள்ளுக்கும் கொடுத்து , உடல் முழுதும் பூசியும் வரலாம்.

Show Buttons
Hide Buttons