ஆஸ்துமா குறைய‌

கீழ்கண்ட மூலிகைகளை பசும்பால், இளநீர் மற்றும் நெய் கலந்து ஊற வைத்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து சலித்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்

தேவையான பொருள்கள்:

  1. சீரகம்.
  2. கருஞ்சீரகம்.
  3. கிராம்பு.
  4. ஓமம்.
  5. அதிமதுரம்.
  6. சுக்கு.
  7. மிளகு.
  8. பசும்பால்.
  9. இளநீர்.
  10. நெய்.

செய்முறை:

  • சீரகத்தை சுத்தம் செய்து 250 மி.லி வெந்நீரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • கருஞ்சீரகத்தை சுத்தம் செய்து 150 மி.லி கொதிக்க வைத்த பசும்பாலில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • கிராம்பின் மேல் உள்ள பூவை நீக்கி விட்டு ஒன்றிரண்டாக தட்டி இளம் வறுவலாக வறுத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • ஓமத்தை சுத்தமான நீரில் கழிவி நிழலில் உலர்த்தி இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • சுக்கை இடித்து 150 மி.லி பசும்பாலில் போட்டு பால் வற்றும் வரை காய்ச்சி பிறகு நிழலில் உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.
  • மிளகை ஒன்றிரண்டாக இடித்து 50 மி.லி நெய்யை விட்டு இளம் வறுவலாக வறுத்து பிறகு நிழலில் உலர்த்தி பொடித்து கொள்ளவும்.

பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை இடித்து பொடியாக்கி சலித்து வைத்து கொள்ளவும்

உபயோகிக்கும் முறை:

  • இந்த பொடியை 1 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு பிறகு வெந்நீர் குடித்து வர வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை உணவு உண்ணும் முன் இதை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

 

Show Buttons
Hide Buttons