செரிய மாந்தம் – சொருகு மாந்தம்

குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். தலைவலி, வயிற்றுவலி இருக்கும். வயிறு பொருமி மாவைக் கரைத்ததுப் போல் வெண்ணிறமாய் மலம் கழியும். அடிக்கடி குழந்தை சீரியழும். களைப்பு மிகுதியால் குழந்தை சோர்ந்துவிழும். இத்துடன் கண் விழிகளை மேல் நோக்கி சொருகிவிடுவது சொருகு மாந்தம்.

மருந்து

வசம்பு – 10 கிராம்
சடாமஞ்சில் – 10 கிராம்
வெள்ளைப்பூண்டு – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
ஆமைஓடு – 10 கிராம்

இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடி செய்து ஒரு லிட்டர் நீரிலிட்டு ஆழக்காகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும். வேலைக்கி ஒரு அவுன்சு வீதம் காலை மாலைகளில் கொடுத்து வர வேண்டும்.

மிளகு – 10 கிராம்
வசம்பு – 10 கிராம்
பூண்டு – 10 கிராம்
வேலிப்பருத்தி இலை
பசு நெய்

இவற்றை வேலிப்பருத்தி இலையை வதக்கிப் பிழிந்து சாறு விட்டு மைபோல அரைத்து குழம்பாகக் கரைத்து, ஒரு தேக்கரண்டி அளவெடுத்து அதில் சுத்தமான பசு நெய் 3 துளி விட்டு குழப்பிக் காலை, மாலை, கொடுக்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons