குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பதுடன் வியர்த்து உடல் குளிரும். முகம் கடுகடுப்பாக இருக்கும். உடலை முறுக்கிக் கொண்டு கொட்டாவி உண்டாகும். வாந்தி ஏற்படும். கைகால்களில் வலிப்பு உண்டாகும். சில சமயம் கொஞ்சம் விறைத்தபடியே இருக்கும்.
மருந்து
தைவேளை வேர் – 20 கிராம்
முடக்கத்தான் வேர் – 20 கிராம்
அழிஞ்சில் வேர் – 20 கிராம்
வசம்பு – 20 கிராம்
திப்பிலி – 20 கிராம்
மிளகு – 20 கிராம்
சுக்கு – 10 கிராம்
கடுக்காய் – 20 கிராம்
தான்றிக்காய் – 20 கிராம்
நெல்லி வற்றல் – 20 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 1/4 லிட்டர்
எண்ணெய்யை தவிர மற்றவைகளை போடி செய்து சிற்றாமணக்கு எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி வீதம் உள்ளுக்குள் கொடுத்து மேல்லுக்கும் தடவி வரலாம்.
கட்டு மாந்தத்துக்குரிய கியாழம் தயாரித்துக் கொடுக்கலாம்.