தலைபாரம் குணமாக
உலர்ந்த மாம்பூவை தணலிலிட்டு அதன் புகையை தலை மீது படும்படி செய்திட தலைகனம் அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி
உலர்ந்த மாம்பூவை தணலிலிட்டு அதன் புகையை தலை மீது படும்படி செய்திட தலைகனம் அகலும்.
மிளகை ஒரு ஊசியில் கோர்த்து நெருப்பில் காட்டி எரித்து புகையை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சளி, இருமல், தலைபாரம் ஆகியவை அகலும்.
சிறுதேள் கொடுக்கு இலையுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல், தலைக்கு தேய்த்து குளித்து வர குணமாகும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து துணியில் கட்டி நுகர தலைபாரம், மூக்கடைப்பு குணமாகும்.
இஞ்சி சாறு, பால், நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் ஒரு நாள் தேய்த்து குளிக்கலாம்.
விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.
குழந்தைக்கு சுரம் அதிகமாயிருக்கும். குளிர் நடுக்கம் உண்டாகும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். மூக்கில் நீர் வடியும். உடல் வீக்கம் காணும்....
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
நல்ல மிளகு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு குடித்து வந்தால் தலைக்கனம் மற்றும் ஜலதோஷம் குறையும்.