கண் தொடர்பான கோளாறுகள் அகல

நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ , கோஷ்டம், அதிமதுரம், இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தாய்ப்பால் விட்டு அரைத்து அரைத்ததை நல்லெண்ணெயில் போட்டுக் கலக்கவும். அடுப்பில் வைத்து எண்ணெய் தைலப்பதம் ஆனவுடன் இறக்கி ஆறியதும் கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும், கண்களில் பாதிப்பு உள்ளோர் தலையில் தேய்த்து நன்றாக ஊறவிட்டு பின்பு குளிக்கவும். இத்தைலத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்நானம் செய்ய பயன்படுத்தி வந்தால் கண்களில் ஆரோக்கியம் பெருகும். மூளைக்கு குளிர்ச்சி உண்டாகி உடலின் சூட்டை சமப்படுத்தும்.

Show Buttons
Hide Buttons