ஆட்டூட்டம்

தேவையான பொருட்கள் :

ஆட்டுச் சாணம் – 5 கிலோ
ஆட்டு மூத்திரம் – 5 லிட்டர்
ஆட்டுப் பால் – 2 லிட்டர்
ஆட்டுத் தயிர் – 2 லிட்டர்
பசு நெய் – 1கிலொ
இளநீர் – 3 லிட்டர்
கரும்புச் சாறு – 3 லிட்டர்
கள் – 3 லிட்டர் அல்லது ஈஸ்ட் – 100க்ரம்
வாழைப்பழம் – 15(நன்றாக கனிந்தது )

பயன்படுத்தும் முறை:

நெல், கரும்பு, வாழை, காய்கறிகள், மஞ்சள் போன்ற எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
விதை நெல்லில் ஆட்டூட்டம் கலந்த நீருடன் ஊறவைக்கலாம். நடவு நாடும் போது நாற்றில் நனைத்து நடலாம். நடவு செய்த 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம். கரும்பு நடவு செய்யும் போது நனைத்து நடவு செய்யவும். இளம் பயிரில் தெளிக்கலாம்.இது போல எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். நீர் பாயும் போது நீருடன் கலந்து விடலாம்.

சிறப்புகள்:

கால் நடைகளுக்கு குடல் புழு நீக்கம், தோல் நோய் நீங்க, விரைவாக சினை பிடிக்க ஆட்டூட்டம் அருமருந்தாகும். 150 மி. லி அல்லது 200 மி.லி கொடுக்கலாம். கோழிகளுக்கு வெள்ளை கழிசல் நோய் நீங்க ஆடூட்டத்தை நீரில் கலந்து வைக்கவும். தவிட்டுடன் பிசைந்து வைப்பதால் கோழிகளில் எடை கூடுகிறது. முட்டையும் பெரிதாகிறது. மனிதர்களுக்கு காலை, மாலை 300 மி.லி தொடர்ந்து கொடுத்து வந்தால் எய்ட்ஸ்,புற்றுநோய், தோல் சம்மந்தமான குஷ்ட்ட ரோகம் போன்ற நோய்களும் குணமாகும். ஆட்டுட்டம் குறைவான அளவு பயன் படுத்தினால் போதும்.உடனே மாற்றம் கிடைக்கிறது. ஆடு மூலிகைகள் சாப்பிடுவதால் மருத்துவ குணம் அதிகம்.

தெளிக்கும் முறை:

200 மி.லி ஆட்டூட்டத்துடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

குறிப்பு :

ஆடு கட்டும் இடத்தை செலவு செய்து மண் தரையாக இருந்தாலும் சிமெண்ட் தரை போட வேண்டும் என்பது இல்லை. பிளாஸ்டிக் தாளை மண் பரப்பின் மீது விரித்து பள்ளமான ஓர் இடத்தில் ஆட்டு மூத்திரம் வந்து சேரும் படி நாமே எளிய முறையில் அமைத்து கொள்ள முடியும்.

Show Buttons
Hide Buttons