நீர் மறைய நீர்க்கட்டு :
நெற்ப்பயிரை பொறுத்த அளவில் முறையைக் கடைப்பிடிப்பதே சிறந்த முறையாகும். தற்போது உள்ள சுழலில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 சென்ட் என்ற விகிதத்தில் குட்டைகள் அமைப்பது சிறந்த பயனை தரும். இந்த குட்டைகள் பெரும்பாலும் அந்தந்த பகுதியில் உள்ள மணல் லேயர் ஆழத்திற்கு இருப்பது மிக சிறந்தது ஆகும்.
இயலாத தருணத்தில் 10 அடிக்குக் குறையாமல் இருப்பது நன்று. இதன் மூலம் நீரில்லாத போது ஓரளவு தாக்கு பிடித்து பயிரை காப்பாற்ற முடியும்.
இக்குட்டையில் மீன்கள் தங்குவதால் வயலில் உள்ள புகையான் போன்ற பூச்சிகளை மிக சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஆலோசனை செய்து செயல்படுங்கள்.