வெட்டுக்காயம் குணமாக
வெடிக்காய் இலையை தண்ணீர் விட்டு அரைத்து காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவர வெட்டுக்காயம் ஆறும்.புண்கள் ஆறியபின் தேங்காய் எண்ணெய் தடவவும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெடிக்காய் இலையை தண்ணீர் விட்டு அரைத்து காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவர வெட்டுக்காயம் ஆறும்.புண்கள் ஆறியபின் தேங்காய் எண்ணெய் தடவவும்.
குப்பைமேனிஇலையை அரைத்து வெட்டுக்காய புண் மீது போட்டால் புண் அழுகாமல் இருக்கும்
இலந்தை இலையை மைய அரைத்து காயத்தின் மீது பற்று போட்டு வந்தால் வெட்டுக்காயம் குணமாகும்.
பிரண்டை எண்ணெய்யை தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.வெட்டுகாயம் சீக்கிரம் ஆறும்.
அருகம்புல், அரிவாள்மூக்கு பச்ச்சிலை சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி கட்ட இரத்த பெருக்கு நிற்கும்.
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.
தும்பைச்சாறு 500 மில்லி. தேங்காய்எண்ணெய் 500 மில்லி இரண்டையும் கலந்து காய்ச்சி வெட்டுக் காயத்தில் தடவ வெட்டுக் காயம் குறையும்.
வேப்ப இலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் கட்ட வெட்டுப்பட்ட காயம் குறையும்.
அரிவாள்மனைப் பூண்டு இலையைக் கசக்கி அந்த சாறை வெட்டுக் காயத்தில் விட்டால் வெட்டு காயம் குறையும்.