உருளைக்கிழங்கு (Potato)
நெருப்புப்பட்டால் கொப்பளிக்காமல் இருக்க
நெருப்புப் பட்டு விட்டால் உருளைக்கிழங்கை அரைத்துப் பூசினால் எரியாது. கொப்பளிக்காது.
உருளைக்கிழங்கு வறுவல் கரகரப்பாக இருக்க
உருளைக்கிழங்கை சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்து வைத்து எடுத்த பிறகு குளிர்ந்த உப்பு...
பொரியல் மொர மொரவென்று இருக்க
உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் போது கொஞ்சம் பயத்தம் மாவு சேர்த்தல், பொரியல் மொர மொரவென்று இருக்கும்.
முறுக்கு சுவை அதிகமாக
தேன் குழல் செய்ய மாவு அரைக்கும்போது உருளைக் கிழங்கை வேகவைத்து அதனுடன் சேர்த்து அரைத்தால் தேன்குழல் சுவையாக இருக்கும்.
உளுந்த வடை மெத்தென்று வர
உளுந்த வடைக்கு மாவை நைசாக அரைத்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்துப் பிசைந்து வடை தட்டினால் புஷ்…புஷ்.. என்று வடை ஜோராக இருக்கும்.
சிப்ஸ் மொரமொரப்பாக இருக்க
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவைத் தூவி விட்டு சிப்ஸ் செய்தால் மொரமொரப்பாக இருக்கும்.
குழம்பில் உப்பு அதிகமானால்
சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து சாம்பாரில் கரைத்து விடவும்.
ஞாபக சக்தி அதிகரிக்க
பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.