புண்கள் குறைய
சமஅளவு நல்வேளை இலை,தும்பை இலை,வெங்காயம் ஆகிய மூன்றையும் எடுத்து அரைத்துப் புண்கள் மேல் பூசி வந்தால் புண்கள் குறையும்.
உடலில் கட்டிகள் உடைய
வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்து கட்டினால் கட்டிகள் உடைந்துவிடும்.
உடல் நாற்றம் குறைய
வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை கொண்டு குளித்து...
அரிப்பு குறைய
நிலவேம்பு இலைகளைஅரைத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் பூசி வந்தால் அரிப்பு குறையும்.
உடல் அசதி குறைய
தூதுவளையையும், முருங்கை கீரையும் சேர்த்து அரைத்து சாப்பிட உடல் அசதி குறையும்.
காய்ச்சல் குறைய
பாரிஜாத இலைகளைச் சுடுநீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து , நீரை வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் காலை,மாலை குடித்து வந்தால்...
புண்கள் குறைய
பப்பாளி இலை மேல் விளக்கெண்ணெய் தடவி,இலைகளை நெருப்பில் லேசாக வாட்டி புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
உடல் பலம் பெற
பருப்புக் கீரை இலைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் குறையும்.உடல் பலம் பெறும்.
சொறி, சிரங்கு குறைய
பிரம்மதண்டு இலைகளை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு மீது பூசி வந்தால் சொறி,சிரங்கு குறையும்.