பால் பாயிண்ட் பேனா எழுதாவிட்டால்
பால் பாயிண்ட் பேனா எழுதவில்லை என்றால் கண்ணாடி மேல் கொஞ்ச நேரம் தேய்த்தால் மறுபடியும் எழுத ஆரம்பித்து விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
பால் பாயிண்ட் பேனா எழுதவில்லை என்றால் கண்ணாடி மேல் கொஞ்ச நேரம் தேய்த்தால் மறுபடியும் எழுத ஆரம்பித்து விடும்.
பால் பாயிண்ட் பேனா ரீபில் எழுதாவிட்டால் கொதிக்கும் சுடுநீரில் போட்டு எடுத்தால் நன்றாக எழுதும்.
பலாப்பழத்தை நருக்கிச் சுளை எடுப்பதற்கு முன் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் பழத்திலுள்ள பால் கையில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
முழுத்தேங்காயை, குடுமி மேற்புறமாய் இருக்கும் விதம் நிற்க வைத்தால் நிறைய நாள் கெடாமல் இருக்கும்.
தயிர் தயாரிக்க மோர் இல்லாவிட்டால் எலுமிச்சைச்சாறு பிழிந்தால் போதுமானது.
மிளகாய், மிளகாய்ப் பொடி இவைகளை வறுக்கும் சிறிது உப்பை சேர்த்துக்கொண்டால் கமறல் வராது.
மிளகாயை நன்றாக இரண்டு மூன்று நாள் காய வைத்து பிறகே சேமித்து வைக்கவேண்டும்.
புளியின் மீது கல் உப்பைத் தூவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு புளி கெடாமல் இருக்கும்.
புளியை வருடம் முழுவதற்கும் வாங்கி வைப்பவர்கள் புளியங்கொட்டையை நீக்கி நன்கு காய வைத்து, மரப்பெட்டியில் அல்லது பானையில் அமுக்கி வைத்தால் வண்டு,...
டிக்காசன் சரியாக இறங்கவில்லை என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரையைத் தூவினாற் போல் போட்டு பிறகு காப்பித்தூள் போட்டு வடிகட்டினால் போதும்.