எறும்பு கடித்த வலி மறைய
சிவப்பு எறும்பு கடித்த இடத்தில் உப்புப் போட்ட இளஞ்சூடான நீரை விட்டு அலம்பினால் வலி மறைந்து விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிவப்பு எறும்பு கடித்த இடத்தில் உப்புப் போட்ட இளஞ்சூடான நீரை விட்டு அலம்பினால் வலி மறைந்து விடும்.
காலில் அட்டைப்பூச்சி ஒட்டிக்கொண்டால் சிறிது உப்பையோ புகையிலையையோ போட்டால் பூச்சி சுருண்டு விடும்.
ரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது.
தோலால் செய்யப்பட்ட சூட்கேசை உபயோகம் இல்லாமல் வைத்திருந்தால் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைத்தால் பூச்சி வராது. நாற்றமும் வராது.
வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துளை இருந்தால் சாக்பீசை சீவித் துளைகளில் அமுக்கி அதன் மீது வெள்ளை அடித்தால் துளை மறையும்.
நெல்லி மரத்தின் கிளை ஒன்றை வெட்டி கிணற்றில் போட்டு வைத்தால் உப்பு நீர் மாறி விடும்.
புதிய பெல்ட் வாங்கியவுடன் மேலும் சில துளைகள் போட வேண்டி இருந்தால் பழுக்கக் காய்ச்சிய தடிமனான ஊசியைத் வைத்தால் துளை உண்டாகும்.
விரும்பிய முறையில் தலைவாரிக் கொள்ளக் சீப்பைத் தண்ணீரில் நனைத்த பிறகு தலை வாரினால் எளிதாக வாரிக்கொள்ள இயலும்.
துடைப்பம் வாங்கியதும் உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து விட்டுப் பின் உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம்.
நெருப்புப் பட்டு விட்டால் உருளைக்கிழங்கை அரைத்துப் பூசினால் எரியாது. கொப்பளிக்காது.