பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க
பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து காற்று போகாமல் இருக்கி மூடவும்.
வாழ்வியல் வழிகாட்டி
பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து காற்று போகாமல் இருக்கி மூடவும்.
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால் காயாமல் இருக்கும்.
கறிவேப்பிலை வாடாமல் இருக்க அலுமினிய பாத்திரத்தில் போட்டு தலைகிழாக கவிழ்த்து வைக்கவும் அல்லது ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.
தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாது. தினமும் நீரை மாற்ற வேண்டும்.
வாழைக் காய்களைத் தண்ணீரிலேயே போட்டு வைத்தால் நாலைந்து நாட்களுக்குப் பழுத்துப் போகாது.
எலுமிச்சை பழத்தை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துவிட்டால் கெடாது..
கீரை வாடாமல் இருக்க அதன் வேர் பாகத்தை நீரில் அமிழும் படி வைத்து இலை பாகத்தை ஈரத்துணியால் சுற்றி வைக்கலாம்.
பக்கவாட்டில் துளை உள்ள வாயகன்ற மண் பாத்திரத்தில் காய்கறிகளைப் போட்டு மண்மூடியால் அதை ஈரமான மெல்லிய கோணியால் மூடி தண்ணீர் உள்ள...