பட்டுப்புடவை
ஒரு படி தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல் இழைகள் விலகாமல் இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு படி தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல் இழைகள் விலகாமல் இருக்கும்.
பட்டுத்துணிகளை சோப்பில் ஊறவைப்பதையும், முறுக்கி பிழிவததையும், அடித்து துவைப்பதையும், வாஷிங் மெஷினில் போடுவதையும், வெயிலில் காயப்போடுவதையும், நாப்தலின் உருண்டைகள் வைப்பதையும் தவிர்க்கவும்.
சுவர்களில் உள்ள ஓட்டைகளை பற்பசை கொண்டு அடைத்து காய்ந்த பின் வெள்ளை அடித்தால் ஓட்டை மறையும்.
வெள்ளை அடிக்கும் போது தரையில் சுண்ணாம்பு சிந்திவிட்டால் தேங்காய் நாரினாலான மிதியடியால் தேய்த்தால் போய்விடும்.
குளியலறையில் பாசி படித்திருந்தால் கோலப்பவுடரை தூவி தேய்த்தால் பளிச்சென்று இருக்கும். அல்லது கல் சுண்ணாம்பைக் கரைத்து பூசினாலும் நீங்கும்.
பாத்ரூம் தரை வழுக்கினால் டிக்காஷன் போட்டு பில்டரில் மீந்துள்ள காப்பி தூளைக் கொண்டு கழுவினால் போதும்.
பாத்ரூம் டைல்ஸ்களில் அழுக்குப் படிந்தால் ஒரு பங்கு வினீகருக்கு நாலு பங்கு தண்ணிரை கலந்து கழுவி விடவும்.