பல்வலி குறைய
புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல் துலக்கி வர பல்வலி குறையும்.
உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.
புளி,உப்பு எடுத்துக் கசக்கி பல்வலி உள்ள இடத்தில் தினமும் வைக்க பல்வலி குறையும்.
பிரமத்தண்டு இலை, பூ, காய் இவற்றை காய வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல்துலக்கி வர பல்வலி குறையும்.
துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.
புங்க மர இலையை காய்ச்சி அந்த நீரை கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.
வாகை மரப்பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.