குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன், வாந்தி அதிகமாக இருக்கும். முக்கி, முக்கி சளியும் , மலமும் கழியும். மலம் கழியும் போது ஆசனவாய் நெருப்பு சுட்டது போல எரியும்.அதனால் குழந்தை கதறி அழும். நாக்கு வெடித்திருக்கும். நாவறட்சி அதிகமாக இருக்கும். மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். குழந்தை திரும்பிப் படுக்கும் போதெல்லாம் வலியினால் அழும். உடம்பு கருப்பாகி, மயக்கமும் ஏற்படும்.
மருந்து
எலுமிச்சம் பழச்சாறு – 6 அவுன்சு
வெந்தயம் – 50 கிராம்
சோற்றுக்கற்றாழைச்சதை – 75 கிராம்
சோற்றுக்கற்றாழைச் சதையை சுத்த நீரில் 7 முறை கழுவி மண் சட்டியில் போட்டு அதில் வெந்தயப் பொடியையும், எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து, அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்துக் காய்ச்சி அதில் கசிந்திருக்கும் நீரை இருத்தெடுத்து காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.