தெற்கத்திக் கணை

குழந்தைக்கு இந்த நோய் சொற்ப சளியோடும், கணைரோகக் குறிகளுடனும் ஆரம்பித்து, மிகவும் தீங்கை விளைவிப்பதாகும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடுமையாக இருக்கும்.

குழந்தை திக்கு முக்காடும், தலை, கைகால் , கழுத்து கோணி இழுக்கும். கண்ணை மூடி மூடித் திறந்து பயப்படும். வலிப்பு உண்டாகும்.

மருந்து

வெள்ளைப் பூண்டு – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
பெருங்காயம் – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்
சுக்கு – 10 கிராம்
வேப்பெண்ணெய் – 1/4 லிட்டர்

எண்ணெயில் மற்றவற்றை பொடித்துப் போட்டு அடுப்பிலேற்றி 3 மணி நேரம் சிறு தீயாக எரித்துக் கொதி கிளம்பியவுடன் இறக்கி, பிறகு 6 மணி நேரம் கடும் வெயிலில் வைத்திருந்து வடிகட்டி காலை, மாலை அரைத் தேக்கரண்டி அளவு கொடுக்க வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons