குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன் இருமலும், சளியும் அதிகமாக இருக்கும். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளும். உடம்பெல்லாம் சிவந்து தோன்றும்.முகம் மஞ்சளித்திருக்கும். வயிற்றில் எரிச்சல் ஏற்படும். நாக்கு கருத்திருப்பதுடன் வெடிப்பும் காணும். கிறுகிறுப்பும் ஆயாசமும் கண்டு குழந்தை சோர்ந்து விழும்.
மருந்து
மணத்தக்காளி இலை – 15 கிராம்
நீர்முள்ளி இலை – 15 கிராம்
தூதுவளை இலை – 15 கிராம்
கண்டங்கத்திரி இலை – 15 கிராம்
முசுமுசுக்கை இலை – 15 கிராம்
திருகுகள்ளி வேர் – 15 கிராம்
சீரகம் – 15 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
செவ்வல்லிக்கிழங்கு – 15 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
பூண்டு – 15 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 15 கிராம்
அனைத்தையும் உலர்த்தி பொடி செய்து ஏனெனியில் போட்டுக் காய்ச்சி காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் உள்ளுக்குள் கொடுத்து உடம்பிலும் பூசிவரக் குணமாகும்.