குளிர் தோஷம்

குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உச்சியும், கண்ணும் குழி விழுந்திருக்கும். கைகால் குளிர்ந்திருக்கும். தலையில் மட்டும் வியர்வை காணும். அரையில் வியர்க்குரு போன்ற நமைச்சல்கள் தோன்றும். தண்ணீராக வாந்தி வரும். வேளைக்கு ஒரு விதமாக மலம் கழியும். கண்ணில் நீர் வடியும். உடல் மிகவும் மெலிந்து விடும். குடித்த பால் அப்படியே கழியும்.நாவறட்சி அதிகமாக இருக்கும்.

மருந்து

வசம்பு – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
மிளகு – 10 கிராம்
மலைதாங்கி வேர் – 15 கிராம்
வேப்பங்கொழுந்து – 30 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 1/4 லிட்டர்
மூலிகைகளை பொடி செய்து போட்டு எண்ணெயில் காய்ச்சி வடித்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுக்க வேண்டும்.

உப்பு, புளி, கடுகு தள்ளுபடி பத்தியம்.

Show Buttons
Hide Buttons