குழந்தைக்கு சுரம் மிதமாகவே இருக்கும். முழங்காலுக்கு கீழே குளிர்ந்திருக்கும். குமட்டல், வாந்தி உண்டாகும். உடல் வீக்கங்கண்டு, பெருமூச்சோடு, இரைப்பு வரும். மூச்சு விடும் போது விலாவின் ஒரு புறமும், சுழித்துப் பள்ளமாகும். தூக்கமிலாமல் அழும். பாலும் குடிக்காது.
மருந்து
மாசிப்பத்திரி – 15 கிராம்
பற்பாடகம் – 15 கிராம்
நாயுருவி – 15 கிராம்
முக்காவேளை – 15 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
சுக்கு – 10 கிராம்
இவற்றை ஒரு மண்சட்டியில் போட்டு வறுத்து அத்துடன்
வசம்பு – 10 கிராம்
மாசிக்காய் – 10 கிராம்
வெட்டிவேர் – 10 கிராம்
கோரைக்கிழங்கு – 10 கிராம்
பறங்கிப்பட்டை – 10 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
கடுகுரோகிணி – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்
தான்றிக்காய் – 10 கிராம்
சங்கன் வேர் – 10 கிராம்
இவற்றைப் பொடி செய்து போட்டு 2 லிட்டர் சுத்த நீர் விட்டுக் கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும். வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை கொடுத்து வர வேண்டும்.
உப்பு , புளி தள்ளுபடி பத்தியம்.