குழந்தைக்கு சுரம் மிகவும் அதிகமாயிருக்கும். உடம்பில் வீக்கம் காணும். ஏப்பம் காணும். சுவாசிக்கும் போது இருவிலாவும் குழிவிழும். தூக்கம் வராது. குழந்தை பால் குடிக்காது.
மருந்து
குட்டி விளாஇலை – 10 கிராம்
அவுரி இலை – 10 கிராம்
கருந்துளசி – 10 கிராம்
பூண்டு – 10 கிராம்
இவைகளை மண்சட்டியில் போட்டு வதக்கி அதிலே ஒரு லிட்டர் சுத்த நீர் விட்டு 1/4 லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும். இந்தக் கியாழத்தில் ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை கொடுத்து வர வேண்டும்.
உப்பு, புளி தள்ளி பத்தியம் இருக்க வேண்டும்.