வாத மாந்தம் – வாள் மாந்தம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். கை, கால் குளிர்ந்து காணப்படும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். வயிற்றுப் பொருமலும் ஏப்பமும் இருக்கும். நாசித்துவாரங்கள் புண்ணாகி வலிக்கும். அடிக்கடி நாசியிலிருந்து நீர் வடியும். உடம்பு வலியினால் அழுது கொண்டே இருக்கும்.

குழந்தை, மாந்தக் குறிகளுடன் உடல் வெளுத்து மெலிந்து இருப்பதுடன், வலிப்பும் காணுவது வாள்மாந்தம் எனப்படும்.

மருந்து

ஆடு தீண்டாப்பாளை இலைச்சாறு – 8 அவுன்சு
தைவேளை இலைச்சாறு – 8 அவுன்சு
மணத்தக்காளி இலைச்சாறு – 8 அவுன்சு
கரிசலாங்கண்ணிச் சாறு – 8 அவுன்சு
துளசிச்சாறு – 8 அவுன்சு
அவுரி இலைச்சாறு – 8 அவுன்சு
பசு நெய் – 16 அவுன்சு
கருஞ்சீரகம் – 20 கிராம்
கடுகுரோகிணி – 20 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 20 கிராம்
கோஷ்டம் – 20 கிராம்

இதில் கடைசியில் உள்ள சரக்குகளை இளவறுப்பாக வறுத்துப் படி செய்து மூலிகை சாறுகளுடன் போட்டு, பசு நெய் விட்டுக் காய்ச்சி வடித்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை கொடுத்து வரவேண்டும்.

Show Buttons
Hide Buttons