முக்கு மாந்தம்

போர் மாந்தக் குறிகளுடன் குழந்தை முக்கி முக்கி முனங்கி அழும். சீதமுமாகக் கழியும். புறங்கால் வீங்கி இருக்கும்.

மருந்து

ஓமம் – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி – 10 கிராம்
வெள்ளைப்பூண்டு – 10 கிராம்
ஆமைஓடு – 5 கிராம்

இவைகளை இளவறுப்பாக வறுத்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி, துணியில் முடிந்திருக்கும்
மருந்துகளை மை போல் அரைத்து காய்ச்சிய கசாயத்தில் கலந்து வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதை காலை மாலை அரை அவுன்சு வீதம் கொடுத்து வர வேண்டும்.

Show Buttons
Hide Buttons