வயிற்றோட்டத்துடன் வாந்தி

வயிற்றோட்டத்துடன் வாந்தி லேசாக இருந்தால் தனிப்பட்ட மருந்து தேவையில்லை. வாந்தி அதிகமானால் தனிப்பட்ட மருந்து அவசியமாகும்.

மருந்து

அத்திப்பட்டை – 15 கிராம்
அரசம்பட்டை – 15 கிராம்
நெல்லிப்பட்டை – 15 கிராம்
மாம்பட்டை – 15 கிராம்
பருத்திப் பிஞ்சு – 15 கிராம்
அத்திக்கொழுந்து – 15 கிராம்
வேப்பங்கொழுந்து – 15 கிராம்
பருத்திவிதை – 15 கிராம்

ஒன்று சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை,மாலை ஒரு அவுன்சு கொடுக்க குணமாகி விடும்.

வயிற்றோட்டத்திற்குரிய மருந்தையும் குறிப்பிட்ட படி கொடுக்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons