தோஷம்

தாயின் கர்ப்பத்தை ஓட்டிப் பிறக்கும் சூட்டாலும், சீரண கருவிகளில் அழற்சியினாலும், தொற்றுநோய் விளைவாலும், கவலையாலும் குழந்தை இளைத்துப் போகும். நாளடைவில் எலும்பில் ‘மஜ்ஜை’ என்று கூறப்படும் பசைபோன்ற சத்துக் குறைந்து போவதாலே தோஷம் எனும் நோய் ஏற்படுகிறது.

குழந்தைக்கு பத்து மாதத்திற்கு மேலும், பல் முளைக்கும் அறிகுறிகள் காணப்படவில்லையானாலும், இரண்டு வயதுக்கு மேல் குழந்தை நடக்க சக்தி அற்று இருந்தால் தோஷ வியாதி என்று தீர்மானிக்கலாம்.

குழந்தைக்கு கழுத்திலும், தலையிலும் வியர்வை உண்டாகி படுத்திருக்கும் தலையணைகள் நனைந்துவிடும். அஜீரணம் அதிகமாகி உண்ட ஆகாரம் அப்படியே கழியும். இரவிலே தூங்காமல் அவதிப்படும். இதில் சுரமும் காணும்.

 

Show Buttons
Hide Buttons