ரத்தக் கணை

குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன் இருமல் அதிகமாக இருக்கும். அதில் இரத்தமும் காணும். இடுப்பும், தொடையும் குடைச்சலான வலியிருக்கும். நாவறட்சி அதிகப்படும். ஆகாரம் செல்லாது.

மருந்து

நன்னாரி வேர் – 10 கிராம்
தூதுவளை வேர் – 10 கிராம்
அதிமதுரம் – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
செங்கழுநீர்க் கிழங்கு – 10 கிராம்
செண்பகப் பூ – 10 கிராம்
கோஷ்டம் – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்

ஒன்று சேர்த்து தாய்ப் பால் விட்டு மை போல் அரைத்து நாள் தோறும் மூன்று வேளை கழற்சிக்காய் அளவு சம அளவு பசு நெய்யுடன் சேர்த்துக் குழப்பி கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons