ஊதுமாந்தக் கணை

குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் கால், கை கண் இமை வீங்கி இருக்கும். நாக்கு புண்ணாகி இருக்கும். குருமூச்சு அதிகமாகி வயிறு ஊதிக் காணும். மூச்சானது துருத்தியின் சத்தம் போலக் கேட்கும். ஆகாரம செல்லாது.

மருந்து

கரிசலாங்கண்ணிச் சாறு – 1 அவுன்சு
நாய்வேளை வேர் – 10 கிராம்
தாய்ப்பால் – 1 அவுன்சு

வேரைச் சாற்றால் அரைத்துக் கொண்டு, பின் பாலைச் சேர்த்து வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை கொடுக்க வேண்டும்.

நீர் முள்ளிச் சமூலத்தைச் சுட்டு சாம்பலாக்கி அதைக் கரிசலாங்கண்ணி சாறு விட்டுக் கரைத்து காலையில் உடம்பு எல்லாம் தடவி வைத்து,மாலையில் சுடு தண்ணீரால் குளிப்பாட்டலாம்.

உப்பு, புளி தள்ளுபடி பத்தியம்.

Show Buttons
Hide Buttons