ஆமக் கணை

குழந்தைக்கு கணை நோய் குறிகளுடன் சுரம் அதிகமாக இருக்கும். வயிறு பொருமி வயிற்றோட்டம் உண்டாகும். கால்கள் குளிர்ந்திருக்கும். கண்ணை திறவாமல் குழந்தை பயந்து அலறி அழும். மூக்கு உயர்ந்தும் புருவம் வளைந்தும் தெரியும். நாவறட்சி அதிகம் தெரியும்.

மருந்து

வேலிப்பருத்தி வேர் – 15 கிராம்
பொடுதலை வேர் – 15 கிராம்
கிளுவை வேர் – 15 கிராம்
சிவதை வேர் – 15 கர,
வெளுச்சி பிசின் – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
வெங்காயம் – 15 கிராம்
கடுகுரோகிணி – 15 கிராம்
சீரகம் – 15 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 12 அவுன்சு (கால் லிட்டர் )
வெள்ளாட்டுப் பால் – 1/4 லிட்டர்

எண்ணெயுடன் பாலைச் சேர்த்து கொண்டு மற்ற மூலிகைகளை பொடி செய்து போட்டுக் காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை, அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவு ஒரு அவுன்சு தாய்ப் பாலில் கலந்து கொடுக்க வேண்டும். தாயார் பால் கொடுக்கும் போதெல்லாம் ஸ்தனக் காம்புக் தாராளமாக தடவிக் கொண்டு பால் கொடுக்கலாம்.

உப்பு, புளி தள்ளுபடி செய்து பத்தியம்.

Show Buttons
Hide Buttons