30 கிராம் வெங்காயம் , 15 கிராம் வெந்தயம், 500 மி.லி சோற்று கற்றாழைச்சாறு, 1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். வெங்காயத்தையும், வெந்தயத்தையும் அரைத்து 8 முறை தண்ணீர் விட்டுக் கழுவி அந்த தண்ணீரை எடுத்து அதனுடன் சோற்று கற்றாழைச்சாறு மற்றும் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி தண்ணீர் வற்றி புகைந்து போன பின் எண்ணெயை வடித்து வைத்து கொள்ளவும். இந்த வெங்காய எண்ணெயை அரை தேக்கரண்டி அளவு காலையில் மட்டும் கொடுத்து வந்தால் தேக எரிச்சல், மூலச்சூடு ஆகியவை குறையும்.