குழந்தைக்கு பித்தம் அதிகரிப்பதனால் உஷ்ணம் அதிகமாகி இந்த சுரம் ஏற்படுகிறது. சுரம் 100க்கு மேல் 104 டிகிரி வரை இருக்கும். வயிற்றோட்டமும் வாந்தியும் இருக்கும். தலை கிறுகிறுக்கும். மஞ்சள் கரைத்த நீரைப் போல வாந்தியாகும். தூக்கத்திலேயே புலம்பலிருக்கும்.நாவறட்சி ஏற்படும். ஆயாசம் உண்டாகும்.
மருந்து 1
நிலவேம்பு – 15 கிராம்
பற்பாடகம் – 15 கிராம்
கடுகுரோகிணி – 15 கிராம்
சிறுகாஞ்சொறி – 15 கிராம்
கோரைக்கிழங்கு – 15 கிராம்
இவற்றை ஒன்றாக தட்டி அரை லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு தினசரி கொடுக்க குணமாகும்.
மருந்து 2
திராட்சைப் பழம் – 15 கிராம்
பற்பாடகம் – 15 கிராம்
கடுகுரோகிணி – 15 கிராம்
கோரைக்கிழங்கு – 15 கிராம்
கடுக்காய்த் தோல் – 15 கிராம்
கொன்றைப் பட்டை – 15 கிராம்
ஒன்று சேர்த்து இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினசரி 3 வேளை கொடுக்க குணமாகும்.