தேவையான பொருட்கள்:
- பூண்டு = 15 கிராம்
- மிளகு = 15 கிராம்
- கழற்சிக்காய் = 60 கிராம்
- சிற்றாமணக்கு = 30கிராம்
- இந்துப்பு = குன்றி மணி எடை
- பால்.
செய்முறை:
- பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும். மிளகை பசும் பாலில் ஊற வைக்கவும். கழற்சிக் காயைக் கழுவித் துடைத்து அம்மியில் வைத்து ஓடு சிதறாமல் அரைத்து பின்பு பூண்டையும், மிளகையும் வைத்து நன்றாக அரைத்து, மெழுகு பதத்தில் வழித்துக் கொள்ளவும்.
- சிற்றாமணக்கு எண்ணெய்யை ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி அரைத்துள்ள மருந்துச் சரக்குகளை அதில் போட்டு மரக் கரண்டியால் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.மருந்துள்ள பாத்திரத்தின் வாயை துணியால் மூடி 1 மணி நேரம் வெயிலில் வைத்துப் பத்திரப்படுத்தவும்
உபயோகிக்கும் முறை:
- மருந்துண்ணப் போகும் முன்னால் முழுதும் பாலும் சோறும் மட்டும் மூன்று வேளைகள் உண்ணலாம்.
- காலை உணவுக்கு ஒரு மணி முன் மருந்தை 6 பாகங்களாக்கி ஒரு பாகத்தை உண்ணவும். மாலை 9 மணிக்கு ஒரு முறை 3 நாட்கள் மட்டும். மருந்துண்ணும் நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள உணவுப் பொருட்களைத் தவிர வேறு எதையும் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது.
காலை உணவு:
- மிளகு பொங்கல், வெந்நீர்.
பகல் உணவு:
- பசும்பாலும் சோறும்.
இரவு உணவு:
- கோதுமை உப்புமா அல்லது பிரட், பசும்பால் அல்லது வெந்நீர் ஆகியவைகளை சாப்பிட வேண்டும்.
- வெந்நீரில் குளிக்கவேண்டும்.