குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் உடம்பு எரிச்சல் , கைகால் சோர்வு, கைகால் வீக்கம், இருமல் காணும். அதிக நேரம் இருமிய பிறகே சளி வெளியாகும். உதடும், வாயின் உட்புறங்களும் வெடித்திருக்கும். வாய் நாற்றம் அடிக்கும். குழந்தை சிரமமாக முனகிக் கொண்டே இருக்கும்.
மருந்து 1
வெந்தயம் – 15 கிராம்
சீரகம் – 15 கிராம்
வெங்காயம் – 15 கிராம்
வில்வப்பழத்து உள்தோல் – 15 கிராம்
ஒன்று சேர்த்து இளவருப்பாக வறுத்து , அரை லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை, ஒரு அவுன்சு வீதம் கொடுத்து வரக் குணமாகும்.
மருந்து 2
வேப்பிலை ஈர்க்கு – 30 கிராம்
புளியிலை ஈர்க்கு – 30 கிராம்
பொன்னாங்கன்னி வேர் – 30 கிராம்
கோழியவரை வேர் – 30 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 1/4 லிட்டர்
ஒன்று சேர்த்து பொடி செய்து எண்ணெயில் கலந்து கடும் வெயிலில் 12 மணி நேரம் வைத்திருந்து வடிகட்டி அந்த எண்ணெயை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுக்க குணமாகும்.