கொதிப்புக் கணை

குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் நெஞ்சும், விலாவும் நெருப்பு போல சுடும். இருமலிருக்கும். தொண்டை கம்மும். தலை வலி அதிகமாகி முனங்கும். நெற்றியில் மட்டும் வியர்வை காணும்.

மருந்து

எலுமிச்சம் பழச்சாறு – 1/4 லிட்டர்
இலந்தை இலைச்சாறு – 1/4 லிட்டர்
வெங்காயச்சாறு – 1/4 லிட்டர்
துளசி சாறு – அரைக்கால் லிட்டர்
சோற்றுக் கற்றாழைச் சதை – 75 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – அரைக்கால் லிட்டர்
சோற்றுக்கற்றாழைச் சதையை ஏழு முறை சுத்த நீரில் சுத்தமாக அலம்பி ஒரு மண் சட்டியில் எண்ணெய்யை விட்டு அதில் சாறுகளையும் போட்டு அடுப்பில் ஏற்றி அரித்து சோற்றுக் கற்றாழைச் சதை நன்றாக வெந்திருக்கும் சமயம் பார்த்து இறக்கி, வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவாக கொடுக்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons