கணை மாந்தம்

குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், உள்ளங்கால்கள் மட்டும் குளிர்ந்திருக்கும். உடல் மெலியும். வயிறு இரைந்து பாசி போலக் கழியும். நாக்கு வறண்டிருக்கும். கண் விழிவட்டமாக சுற்றும். கண்ணில் நீர் வடியும். நெஞ்சு உயர்ந்து உயர்ந்து அமுங்கும். வாந்தியாகும். அடிக்கடி மயக்கம் உண்டாகும்.

மருந்து

சுக்கு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
திப்பிலி மூலம் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
பொன்முசுட்டை இலை – 10 கிராம்
தூதுவேளை இலை – 10 கிராம்
துளசி – 10 கிராம்

இவற்றை ஒன்றாகத் தட்டி ஒரு லிட்டர் நீரிலிட்டு 1/4 லிட்டர் ஆகச் சுண்டக் காய்ச்சிய கியாழத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் குணமாகும் வரையில் காலை மாலை கொடுத்து வர வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons