ஊது மாந்தம்

குழந்தைக்கு சுரம் அதிகமாக இருப்பதுடன் சரீரம் வீக்கம் கண்டிருக்கும். வயிற்றோட்டம், வயிற்றிரைச்சல், வாந்தியும் இருக்கும். மலமானது வெள்ளையாகவும், நுரையாகவும் இருக்கும். தொண்டை சிவந்து வீங்கி வலியினால் கம்மிய குரலாக அழும். பால் குடிக்காது.

மருந்து

பொடுதலை – 10 கிராம்
வேம்பு ஈர்க்கு – 10 கிராம்
மாவிலை ஈர்க்கு – 10 கிராம்
புளியிலை ஈர்க்கு – 10 கிராம்
ஈணா ஈர்க்கு – 10 கிராம்
நொச்சி ஈர்க்கு – 10 கிராம்

இவற்றை நன்றாக நசுக்கி ஒரு லிட்டர் நீரிட்டு ஆழக்காகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவாகக் குணமாகும் வரை கொடுத்து வர வேண்டும்.

மற்றொரு மருந்து

சீரகம் – 10 கிராம்
கடுகுரோகிணி – 10 கிராம்
வேலிப்பருத்தி இலையை வதக்கிப் பிழிந்த சாறு – 1/2 லிட்டர்

இவைகளை நன்றாக குழம்பாக அரித்து வடிகட்டிய சாற்றைக் குழந்தைக்கு வேளைக்கு ஒரு கரண்டி மருந்து மற்றும் தாய்ப்பால் இரண்டு கரண்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

தாயார் உப்பு , புளி தள்ளி பத்தியம் இருக்க வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons