குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். இருமல், வயிற்று வலியினால் குழந்தை அழும். மலம் கட்டி கட்டியாகக் கழியும். மலசலம் கட்டுப்படும். அடிக்கடி கொட்டாவியும் வியர்வையும் உண்டாகும். உதடு வறண்டும் தூங்கி விழுவதைப் போல சோர்ந்து விழும். சில சமயங்களில் இரைப்பும் காணும்.
மருந்து
சீந்தில் தண்டு – 15 கிராம்
களிப்பாக்கு – 15 கிராம்
சிவத்தை வேர் – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்
தான்றிக்காய் – 10 கிராம்
கடுகுரோகிணி – 10 கிராம்
ஒரு லிட்டர் தண்ணீரில் இவற்றைப் போட்டு 1/4 லிட்டர் ஆகக் காய்ச்சி வடிகட்டிய கியாழத்தில் ஒரு அவுன்சு வீதம் காலை மாலை கொடுத்து வர வேண்டும்.
உப்பு ,புளி தள்ளி பத்தியம்.