ஐந்து மூலிகை அற்புத சூரணம்

சுக்கு – 50 கிராம்
கடுக்காய்த் தோல் – 50 கிராம்
அரிசித் திப்பிலி – 50 கிராம்
சிவதை வேர்ப்பட்டை – 50 கிராம்
சுவர்ச்சல உப்பு -50 கிராம்

இந்த இந்து மூலிகைச் சரக்குகளையும் வெயிலில் உலர்த்தி அனைத்தையும் ஒன்று சேர்த்து இடித்து, மெல்லிய துணியில் வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும்.

சிவதையின் வேர் கருப்பு நிறமாக இருப்பதே உகந்தது. சுவர்ச்சல உப்பு கிடைக்காவிட்டால் வெடி உப்பைச் சேர்க்கலாம். மருந்து வீர்யமாகும்.

அளவு : குழந்தைக்கு 4 முதல் 20 குன்றிமணி எடை கொதித்த வெந்நீரில் கலக்கிக் கொடுக்கலாம் .நான்கு மணிக்கொரு தரம் கொடுக்கலாம். பெரியவர்கள் கால் ரூபாய் அளவு கொதித்த வெந்நீரில் கலக்கி சாப்பிடலாம்.

(கர்ப்பிணிகள் சாப்பிடலாம் )

உபயோகம் :

ஆகாரக் கோளாறினால் அஜீரணமும் வயிற்றில் உப்புசம், பொருமல், வயிற்று வலி யாவும் உடனே நீங்கும். குடலிலுள்ள வாயு நீங்கி உணவு சீரணமாகும். பசி தீவிரமாகும். மலசுத்தியாகும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.உடல் வலி, அசதி அகலும்.

மிருது சுரம், நெஞ்சில் கபக்கட்டு இருந்தாலும் சாப்பிடலாம்.

Show Buttons
Hide Buttons