சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
இந்துப்பு – 50 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
முதல் ஆறு மருந்துகளையும் நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து மெல்லிய துணி அல்லது சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும். இந்துப்பைத் தனியாக பொடி செய்து கொள்ளவும். பெருங்காயத்தை போதிய அளவு நெய்யில் பொரித்து உரலில் இடித்துப் பொடி செய்துக் கொண்டு எல்லாப் பொடியையும் நன்றாகக் கலந்து சீசாவில் பத்திரப் படுத்தவும்.
கலை, மாலை இரண்டு வேளைகளிலும் வெந்நீர் அல்லது மோரில் கலந்து சாப்பிடலாம்.
குழந்தைகள், பெரியவர்கள் உணவு உட்கொள்ளும் போது இரண்டு பிடி சாதத்துடன் இந்த பொடி
ஒரு கரண்டி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.
குழந்தைக்கு 5 கிராம் பொடி போதுமானது.
பெரியவர்களுக்கு 15 கிராம் பொடி போதுமானது.
அஜீரணம், வயிற்றுவலி, பசியின்மை, வயிற்று உப்புசம் முதலியவை உடனே விலகும். குடலில் ஏற்படும் வாயுத் தொந்தரவுகள் நீங்கும். உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.