அட்சர மாந்தம்

சுரத்துடன் குளிர் இருக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும். வாயும், உதடும் வெளுத்திருக்கும். எலும்புகள் கூட அதிக உஷ்ணம் கண்டிருக்கும். குழந்தை உடல் மெலிந்து அழும்.

மருந்து

 

துத்தியிலை – 10 கிராம்
ஆடாதோடா ஈர்க்கு – 10 கிராம்
நுணா ஈர்க்கு – 10 கிராம்
வெந்தயம் – 10 கிராம்

இவற்றை ஒரு படி தண்ணீரில் போட்டு அரைப்படியாக காய்ச்சிய கியாழத்தில்,

நுணாஇலை சாறு – 1/2 லிட்டர்
வில்வ இலைச் சாறு – 1/2 லிட்டர்
தைவேளை சமூலம் சாறு – 1/2 லிட்டர்
பொடுதலை சாறு – 1/2 லிட்டர்
செம்முள்ளி சாறு – 1/2 லிட்டர்
ஆடாதோடைஇலை சாறு – 1/2 லிட்டர்
அவுரி இலை சாறு – 1/16 லிட்டர்
வெங்காயச் சாறு – 1/2 லிட்டர்
சிற்றாமணக்கு எண்ணெய் – 1 லிட்டர்

இவற்றை கியாழத்துடன் கலந்து கொண்டு

சிற்றரத்தை – 10 கிராம்
கடுகுரோகிணி – 10 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
அக்ரகாரம் – 10 கிராம்
வெற்றாச்சி பிசின் – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்

இவற்றை நன்றாக போடி செய்து கியாழத்துடன் கலக்கி (அடுப்பை நிழல் போல் எரியவிட்டு) காய்ச்ச வேண்டும். மெழுகு பதத்தில் காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு 30 துளிகள் வீதம் மூன்று நாளைக்கு கொடுக்க வேண்டும். தாயார் உப்பு , புளி தள்ளி பத்தியமாக இருக்க வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons