அடை மாந்தம்

குழந்தையின் வயிறு பொருமி இருக்கும். சில சமயம் நுரையாகவும், பால் போலும் கழியும். மலம் புளிப்பு வாடை அடிக்கும். கைகால்களை முடக்கி வைத்து கொள்ளும். சுரம் காணும்.

மருந்து:

நொச்சி ஈர்க்கு – 15 கிராம்
நுணா ஈர்க்கு – 15 கிராம்
வேப்பம் ஈர்க்கு -15 கிராம்
மாவிலை ஈர்க்கு – 15 கிராம்
புளியன் ஈர்க்கு – 15 கிராம்
உத்தாமணி ஈர்க்கு – 15 கிராம்
பொடுதலை ஈர்க்கு – 15 கிராம்
வில்வ இலை – 15 கிராம்
பெரும் தும்பையிலை – 15 கிராம்
சதாப்பு இலை – 15 கிராம்

இவைகளை நறுக்கி 2 படி சுத்த நீரில் போட்டு அடுப்பில் காய்ச்ச வேண்டும்.

பூண்டு – 5 கிராம்
திப்பிலி – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
வசம்பு – 5 கிராம்

இவைகளை சுடு தண்ணிரில் போட்டு அரைத்து மூலிகைகளுடன் போட்டு விட வேண்டும். கால் லிட்டராகக் காய்ச்சி எடுத்து வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும்.

இந்த மருந்தை காலை, மாலை, இரு வேளை ஒரு சங்கு வீதம் மூன்று நாட்கள் கொடுத்து வர நோய் உடனே குணமாகும்.

Show Buttons
Hide Buttons