குக்கர் அடுப்பில் இருக்கும் போது முடிந்த வரை குக்கரின் அருகில் இருக்க வேண்டும்.ஏனென்றால் குக்கரில் உள்ள பொருட்கள் வெந்து தயாராகி விட்டால் விசில் அடித்துக் கொண்டே இருக்கும் .ஒவ்வொரு முறை விசில் அடிக்கும் போதும் நாம் கவனிக்காமல் இருந்தால் நீராவி வெளியேறி அதன் அழுத்தம் கூடி குக்கரில் தண்ணீர் குறைவதால் குக்கரில் உள்ள பாதுகாப்பு வால்வு கெட்டுப் போய் அதன் தன்மைக் குறைந்து குக்கர் வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.