தேவையானப் பொருட்கள்:
- புளிச்சக்கீரை – இரண்டு கைப்பிடி
- தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால் மட்டும்)
- பச்சைமிளகாய் – 2 (காரத்திற்கேற்ப)
- வெங்காயம் – ஒன்று
- சிவப்பு மிளகாய் – 2
- கடுகு – அரை தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
- கடலைப்பருப்பு– ஒரு தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
- வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
- கொத்தமல்லிவிதை – ஒரு தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- வெள்ளை எள்– ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
- கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை போட்டு வதக்கவும்.
- கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்து விடவும்.
- வாணலியில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். அதனுடன் வதக்கி வைத்துள்ள கீரை, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- அரைத்து வைத்திருக்கும் துவையலுடன் வதக்கியவற்றை போட்டு கலந்துக் கொள்ளவும்.